Sunday, September 22, 2019

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 1

1. மனித இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும் .

2. ஒரு துடிப்புக்கு 0.8 வினாடிகள் ஆகும்.

3. வயது வந்த மனிதனுக்கு இருக்கவேண்டிய இரத்த அளவு 5-6 லிட்டர்  அல்லது 5.6 லிட்டர் .

4. சீரான இரத்த சர்க்கரை அளவு 80/120

5. இரத்தத்தின் சர்க்கரை அளவை குளுக்கோமீட்டர் அளக்கிறது .

6. சீரான இரத்த அழுத்தம் 120/80.

7. இரத்த அழுத்தத்தை ஸ்பிக்மோ மேனோ மீட்டர் அளக்கிறது .

8. மனித இதயத்தை மூடியுள்ள சவ்வு பெரிகார்டியம்.


9. இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேல் அறை ஆரிக்கிள்  கீழ் அரை வென்ட்ரிக்கிள் .

10. இட வல ஆரிக்கிள்களை பிரிப்பது ஆரிக்குலர் செப்டம்.

11.இட வல வென்ட்ரிக்கிள்களை பிரிப்பது வென்ட்ரிக்குலர் செப்டம்.

12. இடது ஆரிக்கிளுக்கும் இடது வென்ட்ரிக்கிளுக்கும் இடையே அமைந்த வால்வு ஈரிதழ் வால்வு .

13. வலது ஆரிக்கிளுக்கும் வலது வென்டிரிக்கிளுக்கும் இடையே அமைந்த வால்வு மூவிதழ் வால்வு .

14.வலது ஆரிக்கிளில் திறப்பது பெருஞ்சிரை .

15. இடது ஆரிக்கிளில் திறப்பது நுரையீரல் சிரை .

16. வலது வென்ட்ரிக்கிளில் திறப்பது நுரையீரல் தமனி 

17. இடது வென்ட்ரிக்கிளில் திறப்பது மகாதமனி .

18. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்து செல்லும் எந்த ஒரு குழாயும்  தமனிகள்    ஆகும் .

19.தமனிகள் எப்போதும் சுத்த இரத்தத்தையே எடுத்துச்செல்லும் .

20. இதயத்திற்க்கு இரத்தத்தை எடுத்துவரும் எந்த ஒரு குழாயும் சிரை .

21. சிரைகள் எப்போதும் அசுத்த இரத்தத்தையே எடுத்து 

22..அசுத்த இரத்தத்தை எடுத்து செல்லும் ஒரே தமனி நுரையீரல் தமனி.

23.மெல்லிய மீள்   தன்மையற்ற வால்வுகள் சிரைகள் .

24.  தடித்த சுவர்களை கொண்டது தமனிகள்.

25. இரத்தத்தின் திரவ பகுதி பிளாஸ்மா.

26. மிகச்சிறிய இரத்தக்குழாய்கள் தந்துகிகள்.

27. தமனிகளுக்கு வால்வுகள் உண்டு.சிரைக்கு வால்வு இல்லை.

28. A B இரத்த வகைகள் எந்த இரத்தத்தையும் பெறும் .

29. O இரத்த வகை எல்லோருக்கும் பொருந்தும்.

30. R B C என்பது இரத்த சிவப்பு அணுக்கள்.இதன் மறுபெயர் எரித்ரோ

சைட்டுகள் மற்றும் மனித உடலின் தொழிலாளர்கள்.


31. இரத்த சிவப்பு அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன.

32. இரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் 100-120 நாட்கள்.

33. இரத்த சிவப்பு அணுக்களின் முக்கிய பணி திசுக்களுக்கு  உணவையும்
ஆக்ஸிஜனையும் எடுத்துச்செல்வது.

34. சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் ஏற்படும் நோய் அனீமியா அல்லது இரத்தசோகை.

35. சிவப்பணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் POLYCYTHEMIA  அல்லது வெண்குஷ்டம்.

36. இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் ஹீமோகுளோபின் .இது வெள்ளை அணுக்களில் இல்லை.

37. இரத்த வெள்ளையணுக்கள் லீகாசைட்எனப்படும்.இது நிணநீர் சுரப்பிகளில் உற்பத்தியாகிறது.இதன் ஆயுட்காலம் நான்கு வாரங்கள்.

38.வெள்ளையணுக்களின் முக்கியப்பணி மனித உடலை நோயிலிருந்து பாதுகாப்பது.

39.இரத்த வெள்ளையணுக்களின் பற்றாக்குறையால் நோய் எதிர்ப்புசக்தி குறையும்.அதிகரிப்பால் இரத்தப்புற்றுநோய் ஏற்படும்.அதாவது குறைந்தால் லியூக்கோபினியா அதிகரித்தால் லுகீமியா .

40. இரத்தம் உறைய காரணம் நுண்தகடுகள்.

41 R B C -இரத்த சிவப்புஅணுக்கள் இருபுற குழிவான தட்டு வடிவம் கொண்டது .

42. இரத்த வெள்ளை சிவப்பு அணுக்களின் விகிதம் 1:500

43. இரத்த சிவப்புஅணுக்களின் முக்கிய பணி ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து உடல் உறுப்புகளுக்கு எடுத்துச்செல்வது.

44. W B C  இரத்த வெள்ளை அணுக்களின் வேலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கிருமிகளை அழிப்பது.

45. ஒரு நிமிடத்துக்கு நாம் விடும் மூச்சின் அளவு 15

46. மனிதனின் இதயத்துடிப்பு அறியப்படும் இடம் மணிக்கட்டு.

47. இதயத்துடிப்பை அறிய உதவும் கருவி ஸ்டெதாஸ்கோப் .

48. இதயத்துடிப்பால் இதயம் சுருங்குதல் சிஸ்டோஸ் .விரிதல் டையஸ்டோல்

.49.இரத்தம் என்பது ஒரு திரவத்திசு .

50. இரத்தத்தை பற்றிய படிப்பு ஹீமொட்டாலஜி .இரத்த இழப்பு என்பது ஹேமரேஜ் .இரத்தத்தின் வகைகள் A ,B ,AB ,O 





No comments:

Post a Comment