Sunday, September 22, 2019

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 2

1. எய்ட்ஸ் வைரஸ் முதலில் இரத்த வெள்ளை அணுக்களை தாக்குகிறது.எனவே எதிர்ப்புசக்தி  குறைகிறது.

2. எய்ட்ஸ் வைரஸ் முதலில் ஆப்பிரிக்காவில் 1984 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

3. எய்ட்ஸ் வைரஸை கண்டுபிடித்தவர் டாக்டர் ராபர்ட் காலூஸ்

4.இந்தியாவில் எய்ட்ஸ் வைரஸ் 1986 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

5.எய்ட்ஸ் ஐ கண்டுபிடிக்க உதவும் சோதனை எலிசா

6.எய்ட்ஸ் ஐ  உறுதிசெய்ய உதவும் சோதனை வெஸ்டர்ன் பிளாட்

7. இரத்த சுழற்சியை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி

8.நுரையீரலின் வெளிப்பை புளூரா

9. கார்பன்டையாக்ஸைடை வெளியேற்றும் உறுப்பு நுரையீரல்.

10.இரத்த வகைகளை கண்டுபிடித்தவர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்

11. நீரை வெளியேற்றும் உறுப்பு தோள் .

12. தோலை பற்றி படிக்கும் படிப்பு டெர்மோட்டாலஜி .

13. சிறுநீரகத்தின் அலகு நெப்ரான்.

14. மனிதன் ஒருநாள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு 1.5 லிட்டர்.

15. சிறுநீரகத்தின் குவிந்த பகுதி கார்டெக்ஸ்.

16.சிறுநீரகத்தின் முக்கிய வேலை சிறுநீரை இரத்தத்திலிருந்து பிரித்து எடுப்பது.இதர வேலை இரத்தத்தில் நீர் மற்றும் உப்பின் அளவை பராமரிப்பது.

17. பிரமிடுகளுக்கு இடையே காணப்படும் குவிந்த பகுதி பெல்விஸ்.

18.உயிர் முடிச்சு என்பது முகுளம்.

19. இயக்கு தசைகளை கட்டுப்படுத்துவது சிறுமூளை.

20.நினைவாற்றல் செயல்களுக்கு காரணமாக அமைவது பெருமூளை.

21. உறுப்புகளிலிருந்து தண்டுவடத்திற்கு வரும் நரம்புகள் உணர்வு நரம்புகள்.

22. அனிச்சை செயலுக்கு காரணம் தண்டுவடம்.

23. கபால நரம்புகளின் எண்ணிக்கை 12 இணை.

24மனித மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடம் கபாலம்.

25. பகுத்தறிவின் இருப்பிடம் பெருமூளை.


26. மூளை மற்றும் தண்டுவடத்தை சுற்றியுள்ள மூன்றுவித சவ்வுகள் பயோமெட்டர்,அரக்கனாய்டு,டியூராமேட்டர் .
27. பான்ஸ்வரோளியையும் தண்டுவடத்தையும் இணைப்பது முகுளம்.

28.தண்டுவடத்தின் மையக்குழலில் நிரம்பியுள்ள திரவம் மூளை தண்டுவட திரவம்.

29.முகத்தில் புலனுறுப்போடு இணைக்கப்பட்டுள்ள நரம்பு கபால நரம்பு.
30. அனிச்சை செயல் என்பது பெருமூளையின் தொடர்பின்றி நடைபெறும் செயல்.
31. உறுப்புகளிலிருந்து தண்டுவடத்திற்கு உணர்வுகளை எடுத்துச்செல்வது உணர்வுநரம்புகள்.

32. தண்டுவடம் உறுப்புகளுக்கு இடும் கட்டளைகளை எடுத்துச்செல்லும் நரம்புகள் கட்டளைநரம்புகள்.

33. தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை 31 இணை.

34. பெருமூளையின் மேல்பகுதி புறணி.

35.பெருமூளையின் மேடான பகுதி கைரஸ் .பள்ளமான பகுதி சல்கஸ் .

36. பெருமூளையின் நிறம் சாம்பல்.உட்பகுதியின் நிறம் வெள்ளை.

37. மூளையின் அடிப்பகுதி முகுளம்.

38.முகுலத்தின் பணி இதயத்துடிப்பு , சுவாசத்தை கட்டுப்படுத்துவது.

39. சிறுமூளையின் இருஅரைக்கோளத்தையும் இணைக்கும் நரம்பு பான்ஸ்வரொலி
40.மனிதமூளையின் மூன்று பிரிவுகள் பெருமூளை,சிறுமூளை,முகுளம்.

41. முகுலத்தின் தொடர்ச்சி தண்டுவடம்.

42.மனிதனின் முதுகெலும்புத் தொடரில் 33 ஜோடி முள் எலும்புகள் உள்ளன.

43.மார்புக்கூட்டில் உள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை 12

44.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் இணையும் இடம் மூட்டு.

45. அசையும் மூட்டுகள் கை ,கால்.

46. அசையா மூட்டுகள் மண்டை ஓடு.

47.உடலுக்கு வடிவத்தை கொடுப்பது சட்டக மண்டலம்.

48.சட்டக மண்டலத்தின் இதர பணி உடலிலுள்ள இதயம்,நுரையீரல்,மூளை,போன்றவற்றை பாதுகாப்பது.

49. மனித உடலின் மொத்த எலும்புகள் 206.

50. உடலின் மிக நீளமான எலும்பு தொடை எலும்பு.

No comments:

Post a Comment