Monday, September 23, 2019

TNPSC பொதுஅறிவு வினா விடை -பகுதி 3

1.மனித உடலின் சிறியஎலும்பு நடுக்காது எலும்பு.

2.மண்டை ஓட்டில் எலும்புகள் எண்ணிக்கை எட்டு.அதில் ஒன்று மட்டுமே அசையக்கூடியது.அது கீழ்த்தாடை எலும்பு.

3. முகத்திலுள்ள எலும்புகள் 14

4.மிக பலமான தசை தாடை 

5. மனித உடலின் மிக வலிமையான பொருள் பல் எனாமல்.

5. நாக்கிற்கு அடியிலுள்ள சுரப்பி சப்லிங்குவல்.

6. தாடைகளுக்கு இடையேயுள்ள உமிழ்நீர் சுரப்பி சப்மாண்டிபுலர் சுரப்பி 

7.கன்னத்திலுள்ள உமிழ்நீர் சுரப்பி பரோடிட்.

8. ஆபத்து காலங்களில் நிலைமையை சமாளிக்க உடலை தயார்நிலையில் வைக்க உதவுவது அட்ரீனல் சுரப்பி.

9. அட்ரீனல்  காணப்படுவது சிறுநீரகத்தின் மேல்பகுதி.

10.லாங்கர்ஹான் திட்டு சுரப்பது இன்சுலின் மற்றும் குளுக்கோஹான் .

11. இன்சுலின் உடலின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது.

12. இன்சுலின் குறைந்தால் நீரிழிவு ஏற்படும்.

13. இரத்தத்தில்  குளுக்கோஸ் குறையும்போது சேமிக்கப்பட்ட கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றி இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்வது குளுக்கோஹான் .

14. லாங்கர்ஹான் காணப்படும் இடம் கணையம்.

15. நாளமில்லா சுரப்பிகள் சுரப்பது ஹார்மோன்கள்.

16. மூளையின் அடிப்பகுதியில் இருப்பது பியூட்டரி சுரப்பி.

17.பியூட்டரி சுரப்பி குறைவால் உடல் மன வளர்ச்சி பாதிக்கப்படும்.

18. பிட்யூட்டரி சுரப்பி அதிகரிப்பால் ராட்சத தன்மை ஏற்படும்.

19. கழுத்தில் காணப்படுவது தைராய்டு சுரப்பி.இது சுரப்பது தைராக்ஸின்.

20. தைராக்ஸின் குறைவால் ஏற்படுவது முன்கழுத்து கழலை.

21.அயோடின் பற்றாக்குறையால் ஏற்படுவது முன்கழுத்து கழலை.

22. விழித்திரை கூம்பு மற்றும் குச்சி செல்களால் ஆனது.

23.கண்ணிற்கு கோளவடிவத்தை கொடுப்பது பின்கண்ரசம் .

24. கருவிழிப்படலத்தின் மையப்பகுதி பாவை.

25. விழிலென்சின் குவிய தூரத்தை மாற்றியமைக்க உதவுவது சிலிரியத்தசை .

26. கண்ணின் உள் அடுக்கில் ஒளி உணர்செல்கள் நிறைந்த பகுதி மஞ்சள் தானம் .

27.விழிலென்சின் ஆக்கம் இருபுற குவிலென்ஸ் 

28.கூம்பு செல்கள் பலநிற ஒளியை உணரும்.

29. குச்சி செல்கள் வெண்ணொளியை உணரும்.

30. விட்டமின் A பற்றாக்குறையால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.

31.கூம்புசெல் பற்றாக்குறையால் நிறக்குருடு நோய் ஏற்படுகிறது.

32. கண்ணின் மாற்று அறுவை சிகிச்சைக்கு எடுக்கப்படும் பகுதி கார்னியா.

33. கிட்டப்பார்வையை சரி செய்ய குழி லென்ஸ் 

34. தூரப்பார்வையை சரி செய்ய குவி லென்ஸ் 

35. லென்ஸின் அலகு டயப்டர் 

36.கேட்டராக்ட் என்னும் புரை நோயினால் பாதிக்கப்படுவது கண்.

37.வாயினுள் காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகள் மூன்று.

38.உமிழ்நீர் சுரப்பி வைரஸ்களினால் தாக்கப்படும்போது ஏற்படும் நோய்  பொன்னுக்கு வீங்கி.

39.இரைப்பையில் சுரப்பது hcl -ஹைட்ரோ குளோரிக் அமிலம்.

40. H C L  இன் வேலை உணவுடன் வரும் கிருமிகளை அழிப்பது மற்றும்  உணவில்லாத நிலையில் பசி உணர்வை தூண்டுவது.

41.முன் சிறுகுடலில் சிறுகுடலில் இருப்பது கல்லீரல் மற்றும் கணையம் 

42. கல்லீரல் சுரப்பது பித்த நீர்.

43.கணையம் சுரப்பது கணையநீர்.

44. மனித உணவுப்பாதையின் நீளம் 8 மீட்டர் .

45. குடல் அழற்சி என்பது குடல்வால் வீக்கம்.

46. சிறுகுடல் பெருங்குடலில் திறக்குமிடத்தில் அமைந்துள்ள வால்வு  இலியோசிக்கல் வால்வு .

47.ஆணின் இனப்பெருக்க உறுப்பு ஓரிணை விந்தகங்கள்.

48. பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு ஓரிணை அண்டகங்கள்.

49. கருவினை பாதுகாக்கும் சவ்வு கோரியான் ,ஆம்னியான்.

50. விந்தணு என்பது மனிதனின் உயிரணு.

No comments:

Post a Comment